பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது, ​​அவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, எடியூரப்பா மீது சதாசிவநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக எடியூரப்பா அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், “புகாரளித்த சிறுமி மனநிலை சரியில்லாதவர். கடந்த காலங்களில் இதுபோன்ற 32 புகார்களை அவர் அளித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.