ரஷ்யாவில் பிரபலமான ரெவோர்ட் என்ற பீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனி தாங்கள் தயாரிக்கும் பீர் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அவர்களின் பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் போட்டோ உள்ளதோடு மகாத்மா ஜி என்றும் எழுதப்பட்டுள்ளது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தி போட்டோவை மதுபான பாட்டில்களில் வைத்தது அவரை இழிவுபடுத்தும் செயல் என்று பலரும் கூறுகிறார்கள்.மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.