ஐபிஎல் 2026 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா, சுழற்பந்து வீச்சில் ‘பவுன்சர்’ வீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்தபோது குருணால் பாண்டியா திடீரென ஒரு அதிவேக பவுன்சரை வீசினார். ஒரு ஸ்பின்னரிடம் இருந்து இப்படி ஒரு பந்தை எதிர்பார்க்காத பூரன், நிலைகுலைந்து போனார். கஷ்டப்பட்டு அந்தப் பந்தை எதிர்கொண்ட பூரன், நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்ததும் குருணால் பாண்டியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குருணாலின் இந்தச் செயலால் பூரன் மிகுந்த அதிருப்தியில் காணப்பட்டார், இருப்பினும் சக வீரர்கள் தலையிட்டு மோதலைத் தடுத்தனர்.
Things are heating up in this Revenge Week clash! 🔥
A contest within the contest is brewing between #NicholasPooran and #KrunalPandya! 👀#TATAIPL Revenge Week 2026 ➡️ #LSGvRCB | LIVE NOW 👉 https://t.co/gEprGnf2A7 pic.twitter.com/C2oqmrYF0X
— Star Sports (@StarSportsIndia) May 7, 2026
ஆர்.சி.பி அணிக்கு 19 ஓவர்களில் 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஆர்.சி.பி கேப்டன் ரஜத் படிதார் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார். ஆனால், லக்னோ பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் (3 விக்கெட்டுகள்) வீசிய துல்லியமான பந்துவீச்சால், ஆர்.சி.பி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கப் போராடும் நிலையில், குருணால் பாண்டியா தனது வேகமான பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்குப் பீதியைக் கிளப்பி வருவது இந்த சீசனின் பேசுபொருளாகியுள்ளது.
