
சமீபகாலமாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பலாத்கார சம்பவங்க அதிகரித்து கொண்டே வருகிறது. அரசு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் திண்டோலி பகுதியில் 6 வயது சிறுமியை 37 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவர் பிஸ்கட் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கோஸ்வாமி என்ற சுரேஷ் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.