
மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டம் வேப்பேரியில் 42 வயதுடைய ஸ்ரீதேவி என்பவர் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் ஸ்ரீதேவியின் ஸ்கூட்டி மீது லேசாக உரசியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீதேவி மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஸ்ரீதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | #SunNews | #Chennai | #Accident pic.twitter.com/OEUSAwKkC9
— Sun News (@sunnewstamil) July 9, 2025