
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததால், பெரும்பாலான நாட்களில் அந்த பெண் இல்லத்தில் தனியாகவே இருப்பார்.
அந்த பெண் அத்தியாவசிய வேலைகளுக்காக பூத்துறை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகம்மது இப்ராஹிமின் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது.
முன்தினம், பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர், மாமனார் வங்கிக்கு சென்றிருந்தார். வங்கியில் இருந்து வந்த மாமனார், வீட்டு கதவு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதைக் கண்டு, சந்தேகத்தில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.
அப்போது அந்த பெண் பிறப்புறுப்பு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சமீபகாலமாக அந்த பெண் இன்ஸ்டாகிராம் மூலம் கேரள மாநிலம் பொழியூர் பகுதியில் உள்ள வாலிபர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, அவர் முகம்மது இப்ராஹிமுடன் பேசுவதைத் தவிர்த்திருந்தார்.
இந்த நிலையில், பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த முகமது இப்ராஹிம், வீட்டு பின்புற சுவரில் ஏறி உள்ளே நுழைந்து, அப்போது இன்ஸ்டா நண்பருடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து, தகராறு செய்து வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
அதற்கு பெண் மறுப்பு தெரிவித்தால் முகம்மது இப்ராஹிம், அவரது உடலை பல்வேறு இடங்களில் தாக்கி, காயப்படுத்தி தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது இப்ராஹிமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.