தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா போக்குவரத்து வசதிக்கான மாத்ருயானம் என்ற திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் பத்தினம் திட்டா, கோட்டையம் , இடுக்கி, மலப்புரம், வயக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள இந்த திட்டம் விரைவில் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக மருத்துவமனை 28 வாகனங்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.