இந்தியாவில் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளம் மாணவர்களிடையே ஆராய்ச்சி திறன் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு பிரயாஸ் யோஜனா என்ற திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. வரவுள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிங் வழிகாட்டுதலின்படி சோதனைகளை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து அறிவியல் பிரிவில் ஆராய்ச்சிகளை செய்யலாம். இதன் மூலம் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் பள்ளிக்கு 20000 ரூபாய் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.