திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து சென்று வருகிறார்கள். இதற்காக பல்வேறு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பயணிகள் சிறப்பு ரயில், வருமாறுக்கமாக திருப்பதியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்டெர்சிட்டி ரயில் 06854 விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு காலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் காட்பாடியில் நிறுத்தப்படும். மேலும் காட்பாடியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும். அதனைப் போலவே திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில்கள் அனைத்தும் அடுத்த வாரம் முழுவதும் ரத்து செய்யப்படும். திருப்பதி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.