அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை அடுத்து மொத்த சிம் கார்டு இணைப்புகள் விற்பனை நிறுத்தப்படும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேர்மையான வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சிம்கார்டுகள் வழங்கப்படும் என்றும் டீலர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு மற்றும் பதிவு நெறிமுறைகள் செயல்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறை மூலம் குற்றவாளிகளுக்கு சிம்கார்டுகள் எளிதில் கிடைக்கும் இடங்களில் தவிர்க்க முடியும். சமீப காலமாக நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.