
நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரைப்பட துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். வர்ஷம் என்ற படத்தின் மூலமாக இவர் புகழ் பெற்றார், மிர்ச்சி, முன்னா, டார்லிங் , மிஸ்டர் உள்ளிட்டவை இவருடைய வெற்றி திரைப்படங்கள், அதன் பிறகு தமிழில் பாகுபலி மற்றும் பாகுபலி2 படத்தில் நடித்து இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.
இந்த நிலையில் பிரபாஸ் திருமணம் செய்யாதது குறித்து இயக்குனர் ராஜமௌலி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், பிரபாஸ் மிகவும் சோம்பேறி. திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.