
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டயேன் டெலனா. இவருக்கு தற்போது 67 வயது ஆகும் நிலையில் அவருடைய வீட்டில் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது கேன்சர் பாதிப்பால் அவர் போராடி வந்த நிலையில் தற்போது உயிரிழந்து விட்டார். இவர் நார்தன் க்ஸ்போஷர் என்ற தொடரில் டெலானோ பார்பரா செமான்ஸ்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்தத் தொடர் கடந்த 1990 முதல் 1995 வரை 6 சீசன்கள் வரை ஒளிபரப்பானது. இது போக அவர் பல்வேறு தொடர்களில் நடித்த கதாபாத்திரங்கள் வரவேற்பு பெற்றது. இவர் 6 வயது முதலே நடித்து வந்த நிலையில் தற்போது 67 வயது ஆகும் நிலையில் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். மேலும் இவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.