முன்னாள் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் அப்துல் அசீம் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். 63 வயதாகும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 1980 முதல் 95 ஆம் ஆண்டு வரை 73 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 12 சதம், 18 அரை சதம் உட்பட 4644 ரன்கள் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு எதிராக இவர் முச்சதம் அடித்தும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக இவர் உயிரிழந்துள்ள செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.