பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நல குறைவால் நேற்று இரவு காலமானார். மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர் சி.யின் இருட்டு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.