பிரபல மராட்டிய நடிகை ஊர்மிளா கொத்தாரே. இவர் நேற்றிரவு மும்பையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொள்ளும் இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகையின் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒரு ஊழியர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

நடிகை ஊர்மிளா லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவருடைய ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் வேகமாக கார் ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.