தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவருடைய அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் பிரேம்ஜி காமெடி ரோலில் நடித்திருப்பார். இவர் கடைசியாக சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 43 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரேம்ஜி பாடகி வினைதாவை காதலிப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வரும்.

இந்நிலையில் வினைதா தன்னுடைய வலைதள பக்கத்தில் பிரேம்ஜியை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார். அதோடு என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்ற பாடலையும் அந்த புகைப்படத்தில் ஒலிக்க விட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் பிரேம்ஜி மற்றும் பாடகி வினைதா ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.