பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர் (61) காலமானார். இதனை அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சைஸ்மோர், மருத்துவ மனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்துள்ளார். சேவிங் ப்ரைவேட் ரையான், ப்ளாக் ஹாக் டவுன், கேப்டன் மில்லர், பியர்ல் ஹார்பர். எனிமி ஆஃப் தி ஸ்டேட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் டாம் சைஸ்மோர்.