தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் கசான் கான் மாரடைப்பால் இன்று  காலமானார். தமிழில் செந்தமிழ் பாட்டு படம் மூலம் அறிமுகமான இவர் முறைமாமன், சேதுபதி ஐபிஎஸ், டூயட், மேட்டுக்குடி, பொண்ணு வீட்டுக்காரன், பத்ரி, சீனா தானா 001 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர்  மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.