
கன்னட சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் புத்தூர் பரத். அவருக்கு 43 வயது ஆகும் நிலையில் மாரடைப்பின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இவர் தேசிய விருது பெற்ற மாயாவி என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சஞ்சாரி விஜய் நடித்திருந்தார்.
இவருடைய திடீர் மறைவு கன்னட திரை உலகை சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு திருமணம் ஆகி நிஹார் என்ற மகனும் ஹன்சிகா என்ற மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.