2025 ஐபிஎல் தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே  ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரத்திற்கு பங்கேற்க மாட்டார் என்று செய்தி வெளியான நிலையில் மற்றொரு வீரர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்  ஹாரி புரூக்  ஐபிஎல் தொடரின் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அவர் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் கடைசி நேரத்தில் விலகினார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் சென்னையில் இடம் பெற்றிருந்தார். தன்னுடைய சொந்த விஷயம் காரணமாக விலக்கியிருந்தார். வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதால் இந்த முறை பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஒரு வீரர் ஏலத்தில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு சரியான காரணம் இல்லாமல் விலகினால் அவர் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்யப்படுவார் என்று தடை விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது காயம் உள்ளிட்ட எந்தவித நியாயமான காரணமும் இல்லாமல் தொடரில் இருந்து விலகி இருப்பதால் ஹாரி புரூக்கிற்கு அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு தடை விதிக்கப்படும்.