
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல எழுத்தாளர் எம்.கே மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட கட்டுரைகள் வழியாக சினிமாக்கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர்.
அதன் பிறகு பிரபல எழுத்தாளர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட எம்.கே மணி மறைந்த செய்தியை கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.