தமிழக அரசு, பிரபல அரசியல் தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்றுள்ளது.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், முன்னாள் ஆளுநர் தமிழிசை மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி, அவர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய ஐந்து காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அரசு திடீரென இந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.