
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகரத்தை நோக்கி குவிய ஆரம்பித்ததால் பிரச்சனை தீவிரம் அடைந்தது. இந்நிலையில் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் நாட்டை வெளியேறிய நிலையில், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அவர் சென்ற பிறகும் வங்கதேசத்தில் கலவரம் குறையவில்லை. இதில் நேற்று முன்தினம் பொதுமக்கள் 24 பேரை கலவரக்காரர்கள் உயிருடன் எரித்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியின் பொது செயலாளரான ஷஹீன் சக்லதாருக்குச் சொந்தமான ஹோட்டல்கள் மற்றும் இடங்கள் தீ வைக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து விட்டதாகவும் , இந்து மதத்தினரை சேர்ந்தவர்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் பெரிய அளவில் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு தாகேஸ்வரிக்கோயில் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க இந்துக்களும், முஸ்லிம்களும் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்நாட்டில் இருந்து டெல்லிக்கு நேற்று விமான மூலம் 6 குழந்தைகள் உட்பட 205 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது .