பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததாக கூறப்படும் ‘இலவச ரீசார்ஜ் திட்டம்’ பற்றிய செய்திகள் முற்றிலும் போலியானவை என பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

‘SaoudKiTech’ என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் ஒரு வருடத்திற்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையற்றதென்றும், அரசு இதுபோன்ற எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை எனவும் பத்திரிகை தகவல் பணியகம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள PIB, அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு 👉 myscheme.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரசுத் தகவல்களைக் குறித்த சந்தேகத்துக்கிடமான செய்தி, படம் அல்லது வீடியோ கிடைத்தால், அதனை உறுதிப்படுத்துவதற்காக கீழ்க்கண்ட வழிகளில் PIB Fact Check அணையை தொடர்புகொள்ளலாம்:

எக்ஸ்: @PIBFactCheck

வாட்ஸ்அப்: +91 8799711259

மின்னஞ்சல்: [email protected]

மேலும் இணையத்தில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்ப வேண்டாம், சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர வேண்டாம் எனவும், உண்மையான தகவல்களை மட்டுமே பரப்புவோம் எனவும் பத்திரிகை தகவல் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.