
இந்த நிலையில் திருவனந்தபுரம்-காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பயணிகள் ஆவலோடு டிக்கெட் புக் செய்து பயணித்தனர். ரயில் குறித்த நேரத்தில் செல்லாமல் தாமதமாக சென்றது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேவைக்கு பின் நிறுத்தப்பட்டிருந்த போது ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிந்துள்ளது. பெரிய அளவு கசிவு இல்லை என கூறி ரயில்வே அதிகாரிகள் அதை சரி செய்தனர்.