
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் மக்கள் முன் உரையாற்றினார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, ராமேஸ்வரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி. அங்கு எனக்கு வேலை இல்லை. பிரதமர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.