
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காக மும்பை போலீசார் ஒரு பெண்ணை கைது செய்தனர். அவருக்கு 34 வயது ஆகிறது. அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பிரதமரை கொலை செய்வதற்கான திட்டமும் அதற்கான ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறி மிரட்டல் வைத்துள்ளார்.
உடனே போலீசார் களத்தில் இறங்கி விசாரித்த போது அது பிராங்க் கால் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த 34 வயது பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.