இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அவர்களை அழைத்து சென்று பாலியல் தொழில்  ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கின்றனர் என கூறப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த வகையில் வில்லிவாக்கம் அருகே அழகு நிலையம் ஒன்று செயல் பட்டு வருகிறது. அங்கு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே சோதனை நடத்தியதில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அங்கிருந்த மோகன்(32)என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்த ஒரு செல்போன் ,ரூ.2500 பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அழகு நிலையத்தில் உரிமையாளரை வலை வீசி தேடி வருகிறார்கள்.