சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று வழங்கவுள்ள தீர்ப்பு, விஜய் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழுவுக்கு (CBFC) நீதிமன்றம் உத்தரவிட்டால், அடுத்த ஓரிரு நாட்களிலேயே சான்றிதழ் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும். அப்படித் தடைகள் நீங்கும் பட்சத்தில், படம் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலால் சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில், பிப்ரவரி மாதத்தின் முதல் வாரமே திரையரங்குகள் திருவிழாக் கோலம் காணும் என்பதில் சந்தேகமில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு படம் வெளியாகவிருப்பது படக்குழுவினருக்கும் பெரும் நிம்மதியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
