சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், பெண் ஒருவர் தனது குழந்தையை மடியில் வைத்தபடி ஓடும் ரயிலில் தேசபக்தி பாடலைப் பாடும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. வறுமை மற்றும் இக்கட்டான சூழ்நிலையிலும், பிச்சை எடுக்காமல் தனது அபாரமான பாடும் திறமையை வெளிப்படுத்தி, தனது மற்றும் குழந்தையின் பசியைப் போக்க அவர் முயற்சிப்பது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கைகளில் கற்களைத் தட்டி தாளம் இட்டபடி, அவர் பாடும் அந்த தேசபக்திப் பாடல் ரயிலில் பயணம் செய்த பயணிகளை மெய்மறக்கச் செய்ததோடு, இணையதள வாசகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த உணர்ச்சிகரமான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pavan Shukla (@pavanshukla_740)

“>

அந்தப் பெண்ணின் குரல் வளத்தையும் மன உறுதியையும் பாராட்டி வரும் நெட்டிசன்கள், சரியான வாய்ப்புகள் கிடைத்தால் இவருக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘திருடி பிழைப்பதை விட, தனது திறமையால் உழைத்து வாழும் இந்தப் பெண்ணே உண்மையான சாதனையாளர்’ என்றும், பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தாயின் போராட்டத்தையும் அவரது தேசபற்றையும் பறைசாற்றும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.