
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும் கொடுப்பதும், தடை செய்யப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பலரும் யாசகம் பெற்று வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மாவட்ட ஆட்சியர் இது பற்றி கூறும் போது சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிர்வாக எண்களுக்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி விசாரித்ததில் 12 பேர் கொடுத்த தகவல் உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. 12 பேரில் 6 பேருக்கு நேற்று ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. பிச்சை எடுப்பவரும் அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவி 233 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். நான்கு மாதங்களில் இந்தூர் மாவட்டம் முழுவதும் 400 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .மேலும் பிச்சை எடுத்த 64 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.