விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் நந்தினி, பிரவீன் காந்தி, பிரஜன் உள்ளிட்ட 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டியில் திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் மோதினர். இதில் அரோரா நான்காவது இடத்தையும், விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

விறுவிறுப்பான இறுதி தருணத்தில், மக்கள் அளித்த அதிக வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சீசன் 7-ல் அர்ச்சனாவிற்கு பிறகு, வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டில் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையை திவ்யா இதன் மூலம் பெற்றுள்ளார்.

திவ்யா கணேஷிற்கு பிக் பாஸ் டிராபியுடன் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் மாருதி விக்டோரிஸ் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், அவர் வீட்டில் இருந்த 77 நாட்களுக்கு 23 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் 73 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அவர் ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது. வைல்டு கார்டு எண்ட்ரியாக 28-வது நாளில் வந்தாலும், முதல் வாரத்திலேயே தலைவரானது மற்றும் கடினமான டாஸ்க்குகளை தைரியமாக எதிர்கொண்டது அவருக்குப் பெரிய அளவில் மக்கள் ஆதரவைத் தேடித்தந்தது.
<a href=”http://

“>
ஆரம்பத்தில் சில போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதல்களால் பின்னடைவைச் சந்தித்தாலும், திவ்யா தனது விளையாட்டு முறையை மாற்றிக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க்கில் பார்வதி மற்றும் கம்ருதீனை அவர் எதிர்கொண்ட விதம் ரசிகர்களைக் கவர்ந்து அவரை வெற்றியாளராக மாற்றியது. தற்போது இந்த வெற்றிக்குப் பிறகு திவ்யாவிற்கு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. அவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.