இந்தியாவில் ஊழியர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் உதவுவதற்காக EPFO கணக்கு தொடங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியரின் மாத சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு எதிர்காலத்திற்காக சேமிக்கப்பட்டு வருகிறது. இதில் இணையும் நபர்கள் EDLI என்ற திட்டத்திலும் சேர்க்கப்படுவார்கள். இதில் 7.5 லட்சம் ரூபாய் வரை டேர்ம் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

அது மட்டுமல்லாமல் ஒரு பணியாளரின் ஊதியத்தில் அதிகபட்சம் 35 மடங்கு வரை காப்பீடு வழங்கப்படும். ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றால் சுமார் 5.25 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும். அதே சமயம் 1.25 லட்சம் கூடுதல் போனஸ் ஆக EPFO கணக்கில் இருந்து ஊழியருக்கு கிடைக்கும். இந்தியாவின் தற்போது முன்னணி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட EPFO கணக்கில் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கிறது. அதாவது 8.15 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.