உலகின் மிக தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் உலக அளவில் 100 நாடுகள் மற்றும் சாந்தியங்களில் உள்ள 400 நகரங்களுக்கு விமானங்கள் வந்து செல்கிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஐந்தாவது முனையத்தை அமைத்து விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட இந்த விமான நிலையத்தில் பாஸ்போர்ட் ஃப்ரீ சேவையை தொடங்குவதற்கு சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பயோமெட்ரிக் தரவுகளை மட்டும் பயன்படுத்தி பாஸ்போர்ட் இல்லாமல் பயணிகள் நகர மற்றும் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும். தானியங்கி குடியேற அனுமதியை விமான நிலையம் அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.