
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள வாஹியாவா என்ற சிறிய நகரத்தில், 21 வயதுள்ள மனநல குறைபாடுள்ள பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கும் சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒருமாதத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறதாலும், இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரபல ஊடகம் வெளியிட்ட வெளியிட்ட தகவலின்படி, கார்லி எனும் அந்த பெண் பஸ்ஸட்டுப் பகுதியில் இருந்தபோது, ஜாஸ்மின் கேயோலா (18) உட்பட 2 பெண்கள் அவரை சுற்றிவளைத்து கேலி செய்தனர். கார்லியின் பைகளையும் கண்ணாடியையும் வலுக்கட்டாயமாக வீசி, பின்னர் அவரை தரையில் தள்ளி விட்டு அவரை அடிக்கத் தொடங்கினர். கார்லி எழுந்து செல்ல முயன்றபோதும், அந்த பெண்கள் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நேரடியாக காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அந்த நான்கு பேரையும் அடையாளம் காண உதவினர். இதில் ஒருவர் 18 வயதுடையவர் மற்றும் மற்ற மூவர் சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு சிறுமிறும் அவரது தாயாரு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த மன்னிப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இதுபோன்று பட்டப் பகலில் பொதுவெளியில் சிறுவர்களாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்வது மிகவும் தவறு என்பதால் கண்டிப்பாக நடவடிக்கை தேவை என்பதை பலரின் கருத்தாக இருக்கிறது.