உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா கடந்த மாதம் தொடங்கிய நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதி நிறைவடைகிறது. மகா கும்பமேளாவில் இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில் இன்னும் ஏராளமான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அங்குள்ள சிறைச்சாலைகளுக்கு மகா கும்பமேளா நீரை கொண்டு சென்று கைதிகளை புனித நீராட வைத்துள்ளனர். அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை புனித நீரை கொண்டு சென்று அங்குள்ள தொட்டிகளில் வழக்கமான நீருடன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த கைதிகள் அனைவரும் அதில் புனித நீராடினர். இது தொடர்பாக அந்த மாநிலத்தின் சிறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறியதாவது, 55 கோடி மக்கள் புனித நீராடி ஆன்மீகப் பலன்களை பெற்றுள்ளனர். அதன்பிறகு உத்திரபிரதேச மாநில சிறை நிர்வாகம் கங்காஜலத்தை பயன்படுத்தி சுமார் 90 ஆயிரம் கைதிகளுக்கு புனித நீராட வசதி ஏற்படுத்திக் கொடுத்து நாட்டிலேயே முதன்மையாக விளங்குகிறது என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.