அமெரிக்க நாட்டில் அலுவலகத்தில் உள்ள விசாரணை அமைப்பான எப்.பி.ஐ அலுவலக கம்ப்யூட்டர்கள் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து எப்.பி.ஐ விசாரணை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனவும் எப்.பி.ஐ கூறியுள்ளது.