அமெரிக்கா கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானின் தலிபான் அமைப்பை முதல் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதன் தலைவரான ஹகிமுல்லா மெஷூத் மற்றும் வாலி உர்-ரஹ்மானை ஆகியோரை தீவிரவாத தலைவர்களாக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த அமைப்பை கனடா, இந்தியா, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மற்ற நாடுகள் அனைத்தும் தடை செய்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தடை செய்யப்பட்ட தலிபான் அமைப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் அந்த இயக்கத்தின் தீவிரவாத நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது “அமெரிக்க ராணுவம் நடத்திய ஆய்வு குறித்து அட்டர்னி ஜெனரல் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த அமைப்பின் மீது விதித்த தடையை அமெரிக்கா திரும்பப் பெறாது” என்று அவர் கூறியுள்ளார்.