ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச், ஹாம்பர்க் உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் மட்டும் மூன்று லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இது குறித்து தொழிற்சங்க தலைவர் கிறிஸ்டின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைய போகின்றது. இதனால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த பொருளாதார தடைகளினால் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.