உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் குறைவாகி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில் சீனாவின் பொருளாதார நிலை என்ற கட்டுரை வெளியானது.

அதில் சீனா அதிபர் ஜின் பின் கூறியதாவது “அரசு துறைகளில் கடன், செலவுகள் உள்ளிட்டவை அதிகரித்து வருவதால் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதோடு நம் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கு மக்களின் எதிர்பார்ப்பும் வளர்ச்சியை ஊக்குவித்தலும் அவசியம். அதோடு சீனாவின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கு வெளிநாட்டினரின் முதலீடுகளை இருப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.