
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற மே 20 ஆம் தேதி வரை www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.