வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வரலாகும். அந்த வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு, கீரி ஆக்ரோஷமாக சண்டை போடுகிறது. பாம்பு கீரியை தாக்க முயற்சி செய்கிறது.

ஆனால் கீரி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பாம்பை விடாமல் பிடித்து பயங்கரமாக தாக்குகிறது. இந்த வீடியோவை @Arhantt_pvt என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது.

இதனை பலர் பார்த்து, “இது இயற்கையின் உண்மையான போராட்டம்”, “கீரி எவ்வளவு வலிமையானது என்பதை இப்போது தான் தெரிகிறது” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாலை நடுவே நடக்கும் இந்த வகையான வனவிலங்குகளின் சண்டைகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பாராத வியப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.