தாய்லாந்தில் இருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய ராஜநாகத்தை (King Cobra) ஒரு மனிதர் சிரித்தபடியே எளிதாகக் கையாளும் காட்சி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒருவர் பாம்பின் வாலைப் பிடித்துக்கொண்டிருப்பதோடு, இன்னொருவர் மிக நம்பிக்கையுடனும், பயமின்றி அதன் தலைப்பகுதியை பிடிக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம் எனும் விளம்பரத்தின் நேரடி வடிவம் என்று ஒருவர் கூற, மற்றொருவர் “இவர் நிஜ வாழ்கையில் ஒரு லெஜெண்ட்” என புகழ்ந்துள்ளனர். உலகிலேயே மிக ஆபத்தான நாகங்களிலொன்று என்ற ராஜநாகத்தை இவ்வாறு அமைதியாக கையாளும் இவரது துணிச்சலும் திறமையும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.