கூகுள் தன்னுடைய AI பரிசோதனை சாட்போர்ட் பார்டுக்கு 40 மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் புதிய புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. இது சிறந்த உரையாடலை உருவாக்கும் சாட்போட்டை பயன்படுத்தி உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடையும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் தமிழ், இந்தி, தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி மற்றும் உருது உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளுக்கான சேவையை செயல்படுத்துகின்றது. பார்ட் AIஆனது சாந்திய மொழிகளில் சேவைகளை வழங்கும் சந்தையில் முதல் பெரிய ஏ ஐ சாட்போட் ஆக மாறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.