இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. எனவே ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் உங்களின் போனை அடிக்கடி restart செய்வது நல்லது. அப்படி செய்தால் மட்டுமே சில பிரச்சனைகளில் இருந்து உங்களால் தப்பிக்க முடியும். ஸ்மார்ட் போன் மூலமாக பணம் செலுத்துதல், உணவை ஆர்டர் செய்தல் என அனைத்து விஷயங்களையும் செல்போன் பயன்படுத்தி தான் செய்கிறோம். எனவே போனை எப்போதும் பத்திரமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் செயல் திறன் குறைந்து புதிய போன் வாங்கும் நிலைக்கு ஆளாக கூடும். எனவே வாரத்தில் ஒரு முறையாவது உங்களின் போனை restart செய்தால் பல ஆயிரக்கணக்கில் சேமித்து வைக்க முடியும். ஸ்மார்ட் போன் மட்டுமல்லாமல் கணினி மற்றும் மடிக்கணினி என எதுவாக இருந்தாலும் அடிக்கடி ரீ ஸ்டார்ட் செய்வது நல்லது. இதன் மூலமாக உங்களின் ஃபோனில் தேவையில்லாமல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அழிந்துவிடும்.