ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஆட்டமிழக்கச் செய்த பிறகு அவருக்கு அளித்த ஆக்ரோஷமான ‘செண்ட் ஆஃப்’ (Send-off) கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில், அபாரமாக பந்துவீசிய ஜாமிசன், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ஒரு யார்க்கர் பந்து மூலம் கிளீன் போல்டாக்கினார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், சிறுவன் என்றும் பாராமல் வைபவ்வை நோக்கி ஜாமிசன் ஆக்ரோஷமாக சில வார்த்தைகளைக் கூறி வழி அனுப்பினார்.

 

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இந்திய முன்னாள் வீரர் பிரியங்க் பஞ்சால் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, 31 வயதான கைல் ஜாமிசன், 15 வயது சிறுவனை ஆட்டமிழக்கச் செய்துவிட்டு இவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அதேசமயம், சிறுவன் வைபவ் எதிரணியினருக்கு எந்த அளவிற்கு பயத்தை உண்டாக்கியுள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி  எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ஜாமிசனுக்கு ஐபிஎல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.