
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் வீரர் அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இவருக்கு அந்நாட்டு அரசு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் பல தனியார் நிறுவனங்களும் வீடு உள்ளிட்ட பல பரிசுகளை அறிவித்தது. அதோடு நாட்டின் உயரிய இரண்டாவது விருதும் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் நாடு திரும்பிய அர்ஷத் நதீமுக்கு அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் பின்னர் அவர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றார். அப்போது அவருடைய மாமனார் எருமை மாட்டை பரிசாக கொடுத்தார். அதாவது அந்த கிராமத்தில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் மதிப்புக்குரியதாக எருமை மாடு பார்க்கப்படுகிறது. மேலும் நதீம் மாபெரும் பரிசை வென்ற பிறகும் அவருடைய கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார் என்று மாமனார் கூறியுள்ளார்.