கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் இயல்வாகை அமைப்பு சார்பாக பாரம்பரிய பொருட்களுக்கான நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த நம்ம ஊரு சந்தை இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் ஏராளமானவர்கள் இதில் பங்கேற்று பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாதத்திற்கான நம்ம ஊரு சந்தை ஜூலை ஒன்பதாம் தேதி நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோயம்புத்தூர் காந்திபுரம் கிராஸ்கட் சாலை பவர் ஹவுஸ் எதிரில் மாநகராட்சியில் இந்த சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச்சக்கரை, குழந்தைகளுக்கான உணவு வகைகள் குழம்பு பொடி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி செல்லலாம். மேலும் இந்த சந்த குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்கு என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் .பொது மக்கள் அனைவரும் இந்த சந்தையில் இலவசமாக பங்கு பெறலாம். மேலும் இது முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத சந்தை என்பதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் துணிப்பை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.