
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். அதனைப் பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் எப்போதும் அதிகமாகவே இருக்கும். பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகளவு வைரலாகி வருகிறது.
மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களின் பட்டியலில் எப்போதும் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. பாம்புகள் பற்றிய திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என ஏராளமாக காணப்படுகின்றன. பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது பாம்பு ஒன்று கொட்டாவி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“Animals yawning are sooo cute”
Emerald Tree Boas: pic.twitter.com/ds8eO8Gy3X
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 5, 2024