
பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார்.
நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், எனக்கும் அன்புமணிக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என கூறினார். இந்த நிலையில் சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை முகுந்தன் சந்தித்துள்ளார். பாமகவின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவராகவே அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். முகுந்தனுக்கு கொடுக்க கட்சியில் நிறைய பெரிய பதவிகள் இருந்தும் அவர் தொழில் செய்யவே விரும்புகிறார். அதனால் தான் பதவியை ராஜினாமா செய்தார் என ராமதாஸ் விளக்கம் அளித்திருந்தார்.